மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணியளவில் முழு அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. (india Former prime Minister Vajpayees last ride today evening)
பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான 93 வயதுடைய அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் வைத்தியசாலையில் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.
இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா,
மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அவரது உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், இன்று மதியம் 1 மணியளவில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு மாலை 4 மணிளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- அழகிய பெண் பணத்திற்கு விற்பனை; போதைக்கு அடிமையான நபர் கைது
- ‘யாபா’ போதைப்பொருள் மாத்திரை வைத்திருந்த நபர் கைது
- யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; india Former prime Minister Vajpayees last ride today evening