கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிப்பு

0
222

கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதானது, விமானக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லினெக்ஸ் எயார் விமான சேவை விமானப் பயணங்களை நிறுத்திக் கொண்டுள்ளது.

வெஸ்ட் ஜெட் மற்றும் சன் விங் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு விமானப் பயணங்களை மேற்கொள்கின்றன.

சந்தையில் போட்டித் தன்மை குறைவடையும் போது கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாது என துறைசார் வல்லுனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் விமான பயணச் சேவைகளை வழங்கி வரும் 40 வீதமான நிறுவனங்களின் சேவைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரையறுக்கப்பட்ட சேவை வழங்கப்பட்டால் தானாகவே கட்டண அதிகரிப்பு இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.