வெற்றி கொண்டாட்டங்களினால் பரிஸில் நடந்த சம்பவம்!

0
364
incident happened Paris celebrations

உலக்கோப்பை இறுதி போட்டி இடம்பெற்ற நாளில் பரிஸில் இருந்து மட்டும் 4,650 தொன்கள் எடையுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. incident happened Paris celebrations

உலக கிண்ண போட்டிகளை தொடர்ந்து ஜூலை 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களில் இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ்-குரோசியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியை காண சோம்ப்ஸ் எலிசேயில் மக்கள் கூடியதோடு, மறுநாள் வெற்றியோடு திரும்பிய வீரர்களை பார்க்க மீண்டும் சோம்ப்ஸ்-எலிசேயில் கூட்டம் கூடியது.

பிரான்ஸின், வெற்றி கொண்டாட்டங்களின்போது வீதிகளில் போடப்பட்ட குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. மொத்தமாக பரிஸுக்குள் மாத்திரம் 4,650 தொன்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2017 இல் சேகரிக்கப்பட்ட குப்பைகளை விட,11 வீதம் (500 தொன்கள்) அதிகமாகும்.

இந்த வெற்றிகொண்டாடத்தின் போது ரசிகர்கள் ஆரவார மிகுதியில் பொதுச்சொத்துக்களை சேதமாக்கியும், பேரூந்துக்களின் கண்ணாடிகளை உடைத்தும், கடைகளை உடைத்தும், மது போத்தல்களை வீதியில் போட்டு உடைத்தும் பெரும் வன்முறையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பெரும் பகுதி சோம்ஸ்-எலிசே பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகும்.

tags :- incident happened Paris celebrations

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்