அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி

0
997
illegal immigration children citizenship US

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து செய்யப்போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். illegal immigration children citizenship US

அமெரிக்காவில், 6-ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார். இதற்கு என சிறப்பு சட்டம் இயற்ற இருப்பதாகவும், அதற்காக வெள்ளை மாளிகை சட்டதரணிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் ட்ரம்ப் தெரிவிக்கையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் நிலை எனவும் இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என கூறியுள்ளார்.

tags ;- illegal immigration children citizenship US

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்