ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். (Hydrocarbon project History unseen revolt Vaiko)
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல் வெளியாக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஆரம்பித்து, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் மத்திய பெற்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயற்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முனைந்து இருப்பது தமிழ் நாட்டின் மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுகின்றது.
நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டக் களத்தில் இறங்கினர். ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து காவேரி பாசனப் பகுதி மக்களை பஞ்சத்தில் தள்ளி வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மண்ணை விட்டு ஏதிலிகளாக இடம்பெயரச் செய்ய மத்திய பா.ஜ.க அரசு சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றது.
வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் அதனை எதிர்க்க மக்களுக்கு துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுகின்றது.
தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது.
அடிமைச் சேவகம் புரியும் தமிழக அரசைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அடக்கு முறையை ஏவி, மக்கள் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகின்றது. அது பகல் கனவாகவே முடியும்.
மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இல்லையேல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கின்றேன் என்றும் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- உடுமலையில் காரும் வானும் விபத்து; சம்பவ இடத்தில் 04 பேர் பலி
- தமிழகத்தில் 03 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கைச்சாத்து
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Hydrocarbon project History unseen revolt Vaiko