ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் யாழ்ப்பாணம் வருவதைத் தடுக்க பெரும் முயற்சி – அர்ச்சுனா எம்.பி. அறிக்கை

0
38

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதனர், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி,

“இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக நடக்கின்ற போராட்டம். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

முன்னதாக 2011ஆம் ஆண்டும் 2016ஆம் ஆண்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்திருந்தனர். இதில் 2016ஆம் ஆண்டு ஆணையாளரை வடக்கு பகுதிகளுக்கு விரவிடாமல் செய்திருந்தனர்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றே கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் அப்போது வடக்கு பகுதிகளுக்கு வந்திருக்கவில்லை.

மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மீளவும் இன்று இலங்கை வருகின்றார். இம்முறையும் மனித உரிமைகள் ஆணையாளரை வடக்கிற்கு வரவிடாமல் செய்ய உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டார். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் கட்டயாம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் நாளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் சந்திக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறிதரன் ஐயா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஐயா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை அவர்கள் மனித உரிமைகள் ஆணையரிடம் கூற உதவிசெய்ய வேண்டும்.

இதனிடையே நாளைய தினம் என்னை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுக்க உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் நான் கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்.

இதன்போது தமிழர்களுக்கு எதிரான நடந்த அனைத்து இனப்படுகொலை சம்பவங்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்பதுடன் அதற்கான முழு ஆவணங்களும் தயார்ப்படுத்தக்கப்பட்டுள்ளன.

எனினும் அதை கொடுக்க கூடாது எனவும் இதனை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.