(How long extreme weather )
தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவரும் நிலையில், அம்மழையுடன் கூடிய காலநிலையானது மே மாதம் இறுதிவரை தொடரும் என கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்யும் மழையானது இன்றைய தினம் சற்று குறைவடையும் எனவும், எனினும் நாளை மறுதினம் முதல் மீள அதிகரிக்கும் எனவும் கால நிலை அவதான நிலைய பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
அதன்படி மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் மேல், மத்திய மற்றும் ஊவா மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கும் கால நிலை அவதான நிலையம் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
அதற்கிணங்க கேகாலை, இரத்தினபுரி, குருநாகல்,பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறைக்கு மண் சரிவு தொடர்பில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர கொழும்பு – அட்டன் பிரதான வீதியில் சிறு சிறு சரிவுகள் பதிவாகின. இரத்தினபுரியில் அயகம, நிவித்திகல, கொலன்ன, கலவான, கிரிஎல்ல, பெல்மதுளை, காவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுமிடத்து மண் சரிவு அனர்த்தம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவிற்கான முன் அறிகுறிகள் தென்படும் இடங்களிலுள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும், மேற்சொன்ன மாவட்டங்களில் தொடர்ந்தும் மழைபெய்யுமாக இருந்தால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாக இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களை வேண்டிக்கொண்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 15 மாவட்டங்களில் அனர்த்தம் : 8 பேர் பலி : 38 ஆயிரம் பேர் பாதிப்பு
- மர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு
- தாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:How long extreme weather ,How long extreme weather ,