T20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்தார் ஹெட்மியர்: ஒரே போட்டியில் 11 சிக்ஸர்கள் அடித்து அசத்தல்

0
76

T20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் அசத்தியுள்ளார்.

நடப்பு கரீபியன் பிரீமியர் லீக்கின் (சிபிஎல்) நேற்றையப் போட்டியில் நடப்புச் சாம்பியனான கயானா அமேசான் வாரியர்ஸ் 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான இந்த போட்டி ஷிம்ரோன் ஹெட்மியருக்கு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளது.

இந்த போட்டியில் வெறும் 39 பந்துகளில் 91 ஓட்டங்களை அவர் குறித்திருந்தார். அதில் 11 சிக்ஸர்களை அடித்திருந்த அவர் ஒரு பவுண்டரி கூட அடித்திருக்கவில்லை.

T20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 10 சிக்ஸர்களுக்கு மேல் அடித்தது இதுவே முதல் முறை ஆகும்.

முன்னதாக ரிக்கி வெசல்ஸ், நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 ப்ளாஸ்ட் போட்டியின் போது ஒன்பது சிக்ஸர்களை அடித்திருந்தார்.

இதன் மூலம் T20 கிரிக்கெட்டில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் அதிக சிக்ஸர்களை அடித்தவர் என்ற சாதனையை ரிக்கி வெசல்ஸ் பெற்றிருந்தார்.

எவ்வாறாயினும் நேற்றையப் போட்டியில் கயானா அணியினர் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடியிருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 69 ஓட்டங்களையும், ஷிம்ரோன் ஹெட்மியர் 91 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

T20 கிரிக்கெட்டில் பவுண்டரி இல்லாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

11 – Shimron Hetmyer (GAW vs SKN) during 91 off 39, Basseterre 2024

9 – Riki Wessels (Notts vs Worcs) during 55 off 18, Worcester 2018

8 – Will Jacks (Surrey vs Kent) during 64 off 27, Canterbury 2019

8 – Syed Aziz (Malaysia vs Singapore) during 55 off 20, Bangi 2022

8 – Dipendra Singh Airee (Nepal vs Mongolia) during 52* off 10, Hangzhou 2023

8 – Heinrich Klaasen (SRH vs KKR) during 63 off 29, Kolkata 2024

இதேவேளை, நேற்றைய ஆட்டம் T20 போட்டியில் பெற்றுக்கொண்ட அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையையும் சமன் செய்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடம்பெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் நேற்றையப் போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 40 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்திருந்தது.

அந்த அணியின் தலைவர் ஆண்ட்ரே பிளெட்சர் 33 பந்துகளில் 81 ஓட்டங்களை எடுத்திருந்த போதிலும் மற்ற வீரர்கள் அவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.