காலநிலை தொடர்பில் புதிய தகவல்கள் – எச்சரிக்கை விடுக்கின்றது காலநிலை அவதான நிலையம்

0
830
heavy rain today meteorology department warning public fishers navy

heavy rain today meteorology department warning public fishers navy
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடல் பகுதிகளும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்பதுடன் தற்காலிகமாக கடும் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய, சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் பொலன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, மன்னார் முதல் புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடல்பகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சற்று கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்வுகூறியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கடலலைகள் 2.5 மீற்றர் வரை உயரும்நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினர் காலநிலை அவதான நிலையத்தின் அறிவித்தல்களை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
heavy rain today meteorology department warning public fishers navy

More Tamil News

Tamil News Group websites :