யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 06 வயது மாணவியின் கொலையைக் கண்டித்தும், நீதி கோரியும் பூரண கடையடைப்பு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை. (Hartal not authorized Jaffna)
சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே வடக்கு மாகாணம் முழுவதும் இன்றைய தினம் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் பாடசாலைகள், பேரூந்துகள், கடைகள் என்பன ஒரு சில இடங்களில் இயங்காவிட்டாலும் ஏனைய இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு ஹர்த்தால் முழுமையாக நடைபெறாது சில இடங்களில் சிலர் மட்டுமே கடைகளைப் பூட்டியும் பேரூந்துகள் ஓடாமலும், பாடசாலைகள் இயங்காமலும் இருக்கின்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தக் ஹர்த்தாலுக்கு பல தரப்பினர்களும் ஆதரவைத் தெரிவிக்காத நிலையிலையே, இன்றைய தினமும் ஹர்த்தால் பூரணமாக நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Hartal not authorized Jaffna
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்