சர்ச்சையில் சிக்கிய ஹரி ஆனந்தசங்கரி; பயங்கரவாதக் குழு உறுப்பினரை ஆதரித்து கடிதம்

0
162

பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் கனேடிய குடியுரிமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என்று கேரி ஆனந்தசங்கரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத கனேடிய பிரதமரும் ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல் முறையாக பதிலளித்த கேரி ஆனந்தசங்கரி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று உதவி கோருவோருக்கு சேவைகளை வழங்குவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்ட விடயத்தில் தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தமது கடமைகளை செய்ததாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.