கைக்குண்டை காட்டி பெண்களை வன்புணர்வு; பொலீசாரால் நபர் கைது!

0
297

கைக்குண்டை காட்டி வயதான பெண்களை அச்சுறுத்தி, வன்புணர்வுக்கு உட்படுத்தி, அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட 36 வயதான நபரை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொலிஸார் கைக்குண்டுடன் கைது செய்துள்ளனர்.

கம்பஹா தம்மிட பிரதேசத்தில் வசித்து வந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த இவர், தம்மிட பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

கஞ்சா மற்றும் கசிப்புக்கு அடிமையான நபர்

கைக்குண்டை காட்டி பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் | Person Raped Women Hand Grenades

கஞ்சா மற்றும் கசிப்பு ஆகியவற்றுக்கு அடிமையான இந்த நபர், தம்மிட பிரதேசத்தில் 66 வயதான பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

வயதான மூன்று பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டமை சம்பந்தமாக சந்தேக நபருக்கு எதிராக கந்தளாய் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் நிலுவையில் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.