எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ஷ களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். (gotabaya rajapaksa usa)
இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று முன்தினம் இரவு மஹிந்த ராஜபக்ஷவை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்த ரகிசிய சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ எந்த கருத்தையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கவில்லை.
இந்நிலையிலேயே இது தொடர்பாக நம்பகமான வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போதே, மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் வெளிப்படையாக கூறினார் என்று அறியப்படுகிறது.
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை மேற்குலகம் சாதகமாக நோக்காது. அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான- அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் இந்த நிலைப்பாடு, ராஜபக்ஷ குடும்பத்துக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tags :- gotabaya rajapaksa usa
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பிரான்ஸ் பாடசாலைக்குள் 100kg கஞ்சா; பத்திரமாக பாதுகாக்க இப்படியும் ஓர் திட்டம்..!!!
- சேலையால் அநியாயமாய் போன உயிர்..!
- சட்டவிரோத கட்டிடங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள்!!
- ஜனாதிபதியாக நான் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். அதனை செய்யாததால் தான் இவ்வளவு அவமானமும், நெருக்கடியும்
- கோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த
- கோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..!
- இலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது
- திருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்
- எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு : சி.வி.புது தகவல்
- ஜனாதிபதி மாமா அப்பாவுடன் வாருங்கள்! ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்
- லோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி
- பாதாள உலக மத்திய நிலையம் இலங்கையில்..!!
- தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பம்; விடுமுறைகள் இரத்து..!!
- டிப்பருடன் மோதிய முச்சக்கரவண்டி – 3 உயிர்களை காவு கொண்ட அனர்த்தங்கள்
- கோத்தாவுக்கு எதிராக போர்க் கொடி வாசுதேவ..!!
- மன்னார் புதைகுழி அகழ்வு பணியில் பல்கலைக்கழக மாணவர்கள்?