கோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த

0
1090
gotabaya rajapaksa mahinda rajapaksa

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa )

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ஆதரவு குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இருக்கும் ஆதரவை நான் அறிவேன்.

2020 ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கும் போது, கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான பொதுமக்களின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவது பொய்.

எமக்குள் எந்த அதிகாரப் போட்டியும் கிடையாது. எனது சகோதரர்களுடன் இணைந்து நாட்டில் வணிகம் செய்வதாக குற்றம்சாட்டியவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

கூட்டு எதிரணியில் இருப்பவர்கள் ராஜபக்ஷக்கள் மட்டுமல்ல. ஏனைய பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

tags :- gotabaya rajapaksa mahinda rajapaksa
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites