காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் வழக்கு; சாட்சியமளிக்க தயாராகும் கோட்டாபய

0
153

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்படட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (30) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோட்டாபய ராஜபக்ச  சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.