பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சிறையிலடைக்க ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து, குற்றவாளிக் கூண்டில் இருந்த ஞானசார தேரர், நீதவானை நோக்கி விரலை நீட்டி ‘நான் செய்த குற்றம் என்ன?” என ஆத்திரம் கலந்த தொனியில் கேள்வியெழுப்பினார். (gnanasara thero court dock)
தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் ஞானசார தேரர் தனது இடது கையை உயர்த்தி மன்றுக்கு கருத்து கூற வேண்டும் எனக் கோரினார்.
எனினும் தண்டனை அறிவிப்பு அனைத்தும் நிறைவு பெற்றதால் நீதிமன்றம் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில் சற்று கடும் தொனியில் நீதிமன்றை விளிக்க ஞானசார தேரர் முற்பட்ட போது, மன்றில் இருந்த அரச சிரேஷ்ட சட்டவாதி ஜனக பண்டார, ‘காபு எக மதித?” என கேட்டார்.
அதாவது தற்போது அனுபவிப்பவை போதாதா. மேலும் தண்டனை வேண்டுமா என தேரரிடம் கேட்டார்.
எனினும் ஞானசார தேரர் அவை எதனையும் கணக்கில் கொள்ளாது நீதிவான் உதேஷ் ரணதுங்கவை நோக்கி விரல் நீட்டி அச்சுறுத்தும் தொனியில்,
‘இந்த நாட்டில் நீதிமன்றம் மட்டும் தானா இருக்க வேண்டும். நான் இந் நாட்டுக்கு செய்த குற்றம் என்ன? என தொடர்ச்சியாக கருத்து கூறினார்.
இதன்போது நீதிவான் உதேஷ் ரணதுங்க, ‘உமக்கு எதிராக தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேன்முறையீடு செய்ய உமக்கு உரிமை உள்ளது. அவற்றை மேன்முறையீட்டில் கூறிக்கொள்ளலாம். வீணாக இங்கு பிரச்சினை ஏற்படுத்தி வழக்குகளுக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள்” என எச்சரிக்கவே திறந்த மன்றில் இருந்த மாகல் கத்தே சுதத்த தேரர் உள்ளிட்ட தேரரை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்தனர்.
தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர்,
நாம் இந்த நாட்டுக்காக செய்யும் பணிக்கு எமக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. உயர்ந்த சம்பள கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையும், ஏச்சும், இகழ்ச்சியும், இவ்வாறு சிறை வாழ்க்கையும் தான் கிடைக்கின்றது. இவை எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.
tags :- gnanasara thero court dock
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!