Home Head Line காதல் உறவு : பல தடவை சிறுமியுடன் உறவு கொண்ட நபர் சிக்கினார்

காதல் உறவு : பல தடவை சிறுமியுடன் உறவு கொண்ட நபர் சிக்கினார்

0
காதல் உறவு : பல தடவை சிறுமியுடன் உறவு கொண்ட நபர் சிக்கினார்

 

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேக நபரொருவரை மொரவெவ காவல்துறை நேற்று கைது செய்துள்ளது Girl Trinco Abuse Tamil News

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியின் தாய் சிறையில் இருப்பதால் அக்காலப்பகுதியில் சிறுமி பெண் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அக்காலப்பகுதியில் இவ்வாறு உறவினர் ஒருவரின் மகனால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சிறுமிக்கும், சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு காணப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.எனினும் குறித்த நபரால் தான் பல முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக மூன்று மாதங்களுக்கு பின்னர் அண்மையில் பெண் உறவினரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்த சிறுமி கர்ப்பமடைந்திருந்த நிலையில், குறித்த பெண் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவரின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, 16 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறையில் இருந்த அந்த சிறுமியின் தாய் தற்போது விடுதலையாகியுள்ளதாக மொரவெவ காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.