ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. German Former LTTE Arrested Involves Murder Tamil News
கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை இவர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தார்.
அதேவேளை 2008ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 சிறிலங்கா படையினரை கட்டி வைத்து, அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பாதுகாப்பு அளித்தார் என்றும், கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தார் என்றும் சிவதீபன் மீது ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில் – ஜெர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்