நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

0
1274
Gemini Ganesan daughter family separated,Gemini Ganesan daughter family,Gemini Ganesan daughter,Gemini Ganesan,Gemini

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய, ”நடிகையர் திலகம்” படத்தால் என் குடும்பம் பிரிந்து விட்டது என, ஜெமினி கணேசனின் மகள் கமலா காட்டமாக தெரிவித்துள்ளார்.(Gemini Ganesan daughter family separated)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

அஸ்வின் ரெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் நடிகையர் திலகம். இத் திரைப்படம் சில தினங்களுக்கு முன் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.

பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிப்பதாக இந்த படம் அமைந்துள்ளது. இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷூம், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்திருந்தனர்.

இப் படத்தில் சாவித்ரிக்கு, ஜெமினி கணேசன் மதுப்பழக்கத்தை கற்றுக்கொடுத்தது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு, சாவித்ரியின் மகள் விஜி அதை கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து கமலா செல்வராஜ் கூறுகையில்.. :-

”அப்பா மற்றும் அம்மா பற்றி ’நடிகையர் திலகம்’ படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை அறிந்தும், விஜி அதுபற்றி கண்டு கொள்ளவில்லை.
இனி அவர் (விஜி) என் முகத்தில் முழிக்க வேண்டாம்.

அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தெரிவித்து விட்டேன். நடிகையர் திலகம் படத்தால் எங்கள் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம்” இவ்வாறு கமலா வேதனையுடன் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Gemini Ganesan daughter family separated

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 07-06-2018