கொத்மலை ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (GCE Advanced Examination Three students injured accident)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா ஹரங்கல பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் பரீட்சை எழுதுவதற்காக ஹரங்கல பகுதியில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்லும் பொழுது, கிரிமிட்டி பகுதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த மூன்று மாணவிகளும் பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுதிய பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
ஏனைய இரு மாணவிகளும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புக்கள் திருட்டுத்தனமாக பதிவு
- வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது
- ஞானசாரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று
- பர்தா விவகாரம் : வெடித்தது சர்ச்சை
- தகாத வார்த்தைகள் பேசிய தோட்ட அதிகாரிகள் ; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; GCE Advanced Examination Three students injured accident