இஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert
இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் 90 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடந்து தற்போது Bataclan அரங்கில் இஸ்லாமிய ரப் பாடகரை அனுமதித்தது குறித்து பல கண்டனங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய முன்னணி கட்சித்தலைவர் மரீன் லூ பென் தெரிவிக்கும் போது, ‘இது பத்தகலோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களை அவமதிக்கும் செயலாகும்!’ என தெரிவித்துள்ளார். ‘இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு துணைபோக வேண்டாம்!’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர அவரின் கட்சி சார்பில், இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி குற்றக்கடிதங்கள் கோரப்பட்ட நிலையில், நேற்று காலை வரை 15,000 கையெழுத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதற்கு, மற்றொரு அரசியல் தலைவரான Laurent Wauquiez உம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தவிர, மக்ரோன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் Aurore Berge ‘இது பலியானவர்களை அவமதிக்கும் செயலாகும்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி Bataclan இல் இம்மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- புயலிலிருந்து தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி – பிரான்ஸில் சம்பவம்!
- இடி மற்றும் மழையுடனான கால நிலை நீடிக்கும் – எச்சரிக்கின்றது கால நிலை அவதான நிலையம்