மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் சகலவிதமான ஆவணங்களையும், இணைப்புகளையும் பாராளுமன்றத்திற்கு வழங்குவது தொடர்பாக சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கையெடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளரால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். (Fraudulent documents banned Parliament)
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலுள்ள சீ 350 360 வரையான ஆவணங்களே அனுப்பி வைக்கப்பட்டன. அவை தொடர்பில் ஜுன் 5 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கை சம்பந்தமான கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சீ 1 முதல் 349 வரையான அனைத்து ஆவணங்களையும், இணைப்புகளையும் கூடிய விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறுகோரி ஜுன் மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதி செயலாளரால் ஜூலை மாதம் 18 ஆம் திகதி சட்டபூர்வமான பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் பிணைமுறிமோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் சகலவிதமான ஆவணங்களையும், இணைப்புகளையும் பாராளுமன்றத்துக்கு வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எனவே, அவரின் ஆலோசனை, இணக்கப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதனால் இவ்விவகாரம் தொடர்பான சகலவிதமான ஆவணங்களும் ஜனாதிபதி செயலகத்திடமிருந்து சட்டபூர்வமாக எனது கைகளுக்கு கிடைக்கும்வரை, ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டு, பாராளுமன்றத்துக்கும், நாட்டிற்கும், எம்.பி.க்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை, அறிவிப்புகளை வெளியிடுவதை நிறுத்துமாறு எம்.பி.க்களிடமும், ஊடகங்களிடமும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
tags :- Fraudulent documents banned Parliament
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோட்டாபய ஒரு சர்வதேச தீவிரவாதி – சம்பிக்கரணவக்க!!
- பூதாகரமாகியுள்ள ஞானசார தேரர் விவகாரம் : இன்று முக்கிய சந்திப்பு
- சுயாட்சியை வழங்குங்கள் : மைத்திரிடம் நேரடியாக தெரிவித்த சிவி
- ஏ9 வீதியில் சினிமா பாணியில் நடந்த விபத்து : பொலிஸ் அதிகாரிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்
- வவுனியாவில் வைத்தியசாலையில் அரங்கேரிய பாலியல் துஷ்பிரயோகம் : அம்பலத்திற்கு வந்தது
- நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்த குண்டு; இரத்தப் போக்கே உயிரிழக்க காரணம்
- மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; ஐவரும் விளக்கமறியலில்
- துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் பலி; களத்தில் கொழும்பு விசேட பிரிவினர்
- ஞானசார மீதான பிணை மனு : சற்றுமுன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
- யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த முடியாது; ஆனோல்ட்
- ஞானசார கைது : அரசியலமைப்பில் இதனை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்
- பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பரபரப்பு : கண்ணீர்ப்புகை பிரயோகம்
- காணாமல் போதல் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் ; அல்ஜசீரா
- மீண்டும் மஹிந்தவிடம் தலைமைத்துவம்
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; பகீரங்கப்படுத்திய கருணா அம்மான்
- மொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…
- அக்கரைப்பற்றில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம்களுக்கு விடுக்கும் அவசர கோரிக்கை
- பிக்குகள் சிறையில் எவ்வாறு அடைக்கப்பட்டார்கள்; வரலாற்று ஆதாரம்!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!