பிரான்ஸில், தமிழர்களின் தொழிலாளர் நாள் பேரணி!

0
3051
France Tamil Labor Day rally

பிரான்ஸ் தமிழர் ஒரங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் மே 1 ஆம் திகதி தொழிலாளர் நாள் பேரணி எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.France Tamil Labor Day rally

பாரிஸ் நகரின் Bastille நினைவுத் தூபிப் பகுதியில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பித்த பேரணி, பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படம் தாங்கி மஞ்சள், சிவப்பு பலூன்கள் கட்டப்பட்ட ஊர்தியின் மத்தியில் பதாதைகளைத் தாங்கிய நிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும், செயற்பாட்டாளர்களும் படையெடுத்துச் சென்றனர்.

தொழிலாளர் நாள் பேரணியில் வெர்சைல் தமிழ்ச்சோலை மாணவர்களின் பறை இசை அணியினர், லாக்கூர்னெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் இன்னியம் அணியினரின இசை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கியிருந்ததுடன், ஒலி பெருக்கிகளிலும் உணர்வு மிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தமை அனைவரையும் மிகவும் கவர்ந்திருந்தது.

மேலும், பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணி சென்றுகொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்களின் வன்முறைகளால் அங்கு பெரும் மோதல், அசம்பாவிதங்கள் இடம்பெற்றதுடன், கண்ணீ;ர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. அவை பொதுமக்களின் மத்தியில் வீழ்ந்ததனால் ஊர்வலத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அவசரமாக இடைநடுவில் நினைவுக் கூட்டம் இடம்பெற்றது. அங்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தியிருந்தார். அங்கு சாதகமற்ற நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டதனால், நிகழ்வு தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**