தானியக்கிடங்கில் ஏற்பட்ட தீயினால் பெரும் பரபரப்பு!

0
734
France Strasbourg fire 4 injured

பிரான்ஸில், Strasbourg நகரில் உள்ள தானியக்கிடங்கு ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். France Strasbourg fire 4 injured

நேற்று 9.30 மணி அளவில், Strasbourg நகரின் Rhin-Napoléon வீதியில் அமைந்துள்ள குறித்த சேமிப்பு கிடங்கில், பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீயை அணைக்க போராடினர்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் படி, இது ஒரு விபத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விபத்தில் நால்வர் காயமடைந்ததாகவும், அதில் மூவர் மிக மோசமான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

அங்கு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைப்பதற்குள் கடும் புகை மேலெழும்பி புகைமண்டலமாக நிலவியது. இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**