உடல் ஊனமுற்றோர்களுக்கு பிரான்ஸில் இலவச பயணம்!

0
819
France handicapped travel free

பிரான்ஸில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்த பயண அட்டை இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதமே அரசினால் அறிவிக்கப்பட்டது. France handicapped travel free

இந்த Pass Paris Seniors என அழைக்கப்படும் இலவச பயண அட்டை, முதியோர்களை பொது போக்குவரத்துக்களில் பயணிக்க வைக்க தூண்டும் விதத்தில் அமையும் என தெரிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இலவச பயண அட்டையானது, கடந்த மூன்று வருடங்களாக பரிஸில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும். இது தவிர, Pass Paris Access என அழைக்கப்படும் நவிகோ அட்டையானது, உடல் ஊனமுற்றோர்களுக்காகவும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கு சில விதிமுறைகளும் இருக்கிறது. மாதாந்த வருமானமாக 2,430 யூரோக்களுக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் மாத்திரமே இந்த சேவையினால் பயனடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**