நாளை காலை 6 மணிவரை மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையிலுமுள்ள கடற்பிராந்தியங்களுக்கு கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Fisherman Weather Alert Sri Lanka Tamil News Today
இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடலலை 4 முதல் 6 அடி வரை மீற்றர் உயரக்கூடும் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாளை காலை 6 மணிவரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளூடாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பத்மசிறி திசேரா மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!