தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். father’s tractor machine child tragedy river
இந்தச் சோகச் சம்பவம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கல்லாரைப் பகுதியில் நேற்று மதியம் 1.20 மணியளவில் நடைபெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விஜயகாந்த் சஸ்மிதன் என்ற பாலகனே உயிரிழந்துள்ளார்.
வீட்டு வளவில் உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெளியில் செல்வதற்காக அதனை தந்தை இயக்கியுள்ளார். உழவு இயந்திரத்தில் ஏறுவதற்கு முன்னர் வீட்டு முற்றத்தில் யாரும் இருக்கவில்லை. இயந்திரத்தை பின்பக்கமாக இயக்கியுள்ளார்.
உழவு இயந்திரத்தின் சத்தத்தைக் கேட்டு வீட்டினுள்ளே விளையாடிக் கொண்டிருந்த சஸ்மிதன் வெளியே வந்துள்ளார்.
உழவு இயந்திரம் பின்நோக்கி நகர்த்தப்படும்போது அதன் சில்லினுள் அகப்பட்டுள்ளார். தந்தை உடனடியாக உழவு இயந்திரத்தை நிறுத்தி சிறுவனை மீட்டு தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரண விசாரணையை மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெ.கிறிஸ்தோபர் மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
tags ;- father’s tractor machine child tragedy river
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!
ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை
நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்
காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!
கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய
தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!