எச்சரிக்கை! : இன்றும் கடும் மழை பெய்யும் : 68 ஆயிரம் பேர் பாதிப்பு

0
1005
extreme weather 9 dead

(extreme weather 9 dead)
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதோடு இன்றும் கடுமையான மழைபெய்யும் என்பதோடு பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் 9 பேர் பலியானதுடன், 24 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 956 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளுக்காக 2.5 மில்லியன் ரூபா வரையில் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, களனி, ஜின், களு முதலான கங்கைகள் மற்றும் மாஓய, அத்தனகலஓய ஆகியவற்றின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

குறிப்பாக காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :