எதிர்பார்த்த மாற்றங்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லையாம்!

0
853
expected changes not made cabinet Hirakika Premachandra tamil news

(expected changes not made cabinet Hirakika Premachandra tamil news)

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான நெருக்கடி, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மீண்டும் வெளிவர ஆரம்பித்துள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களே பிரதமருக்கு பெரும்பாலும் ஆதரவாக செயற்பட்டனர்.

எனினும், அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இதை கருத்திற்கொள்ளாமல் பிரதமர் செயற்பட்டிருப்பது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை கடும் அதிருப்பதியடைய வைத்துள்ளது.

இவ்வாறான செயற்பாட்டினால் எதிர்வரும் காலங்களில் எதுவும் பிரச்சினைகள் வருமாயின், அவர்கள் பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவது சந்தேகம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(expected changes not made cabinet Hirakika Premachandra tamil news)

More Tamil News

Time Tamil News Group websites :