சீகிரியாவில் எந்தவொரு கேபிள் கார் திட்டத்தையும் நிறுவ அனுமதியில்லை

0
533
establishing cable car project not permitted Sigiriya Rock Fortress

(establishing cable car project not permitted Sigiriya Rock Fortress)

சீகிரியா குன்றின் கோட்டைப் பகுதியில் எந்தவொரு கேபிள் கார் திட்டத்தையும் நிறுவுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பண்டைய கல் கோட்டைக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கான கேபிள் கார் திட்டத்தை நிறுவுவதற்கு அண்மையில் மத்திய கலாச்சார நிதியம், சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கேபிள் கார் அமைக்கும் திட்டத்தை இரகசியமான முறையில் முன்னெடுத்து வருவது சம்பந்தமாக அறியக்கிடைத்துள்ளது.

சீகிரியா வேலைத்திட்ட அலுவலகம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயங்களில், சீன நிறுவனத்தின் பிரதிநிகளுடன் இணைந்து கேபிள் கார் அமைப்பதற்காக முக்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக பல விடயங்கள் அறியக் கிடைத்தன.

ஒரு சீன நிறுவனத்தின் ஒரு குழு இரகசியமாக ஒரு சாத்தியக்கூறு ஆய்வு நடத்தியதாக வெளியான தகவல் தொடர்பாக விசாரித்த போதே அமைச்சர் இந்த தகவல் வெளியிட்டுள்ளார்.

மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளரில் இருந்து கீழ் மட்ட அதிகாரிகள் வரையில் மிகவும் இரகசியமாக மூன்று நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறியக் கிடைத்துள்ளது.

எனினும் இந்த திட்டம் சம்பந்தமாக ஊடகங்களுக்கு தகவல் வௌியிடாமல் மறைக்கப்படுகிறது.

இதனையடுத்து இது தொடர்பான பல தகவல்கள் இரகசிய கெமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீன பிரஜைகளுடன் இணைந்து தொல்பொருள் சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவே தொல்பொருள் அதிகாரி ஒருவர் நாம் வினவிய போது கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வினவிய போது ஒருபோதும் சீகிரியாவுக்கு கேபிள் கார் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று கூறினார்.

(establishing cable car project not permitted Sigiriya Rock Fortress)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites