தமிழீழ விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெற்றால் மகிழ்ச்சியடைவோம் என்று ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். (EPDB support vijayakala maheswaran statement)
விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் குற்றமிழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என கூறிய கருத்துக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரனிடம், ஊடகவியாளரொருவர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலைப்புலிகள் மீளவும் உருவாக வேண்டுமெனத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அவர், ஜனநாயகத்தில் நீதிமன்றங்கள், சட்டங்கள், மனித உரிமைக் குழுக்கள் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் போன்றவர்களின் செயற்பாடுகள் இதற்குமப்பால் இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் தண்டனை நடைமுறைகள் போன்று காணப்படுகின்றன.
இதன் காரணமாகவே தற்போது யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டுக் கலாசாரம், சிறுமிகள் துஸ்பிரயோகம் போன்ற சமூகவிரோதச் செயல்கள் விடுதலைப் புலிகள் மீளவும் தோற்றம் பெற்றால் கட்டுப்படும்.
தாங்கள் நிம்மதியாக வாழ முடியுமென எமது மக்கள் கருதுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
- அவுஸ்திரேலியாவில் தொழில் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணமோசடி
- ஐஸ் போதைப் பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; EPDB support vijayakala maheswaran statement