ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

0
669
deny caste based promotion - kamal hassan india tamil news

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy drink-scooter kamalhassan india tamil news

கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, அரசு வேலைகள் குறைந்து கொண்டே வருகிறது எனவும், சிறு தொழில்கள் பெருக ஆரம்பித்துள்ளது எனவும், தொழிலாளிகளின் உலகம் முதலாளிகள் உலகமாக மாறுகிறது என பதிலளித்தார்.

மக்கள் நீதி மய்யம் இளைஞர்களுக்காக என்ன சப்போர்ட் செய்ய போகிறது என்ற கேள்விக்கு, அரசியலில் இருப்பவர்கள் அரசியலை தேற்றத்தான் முடியுமெனவும் இளைஞர்கள் தான் இந்த அரசியலை மாற்ற முடியும் எனவும் பதிலளித்தார்.

எனக்கு பிடித்த அவதாரமும் அரசியல்வாதி தான் எனவும், நான் நானாக உங்களுடன் கலந்திருக்க இந்த அவதாரம் தான் உதவுகிறது எனவும் அவர் கூறினார்.

மேலும் மாணவர்கள் கேள்விக்கு இந்தியாவில் விவசாயமும், கல்வியும் முன்னேற வேண்டுமெனவும், மேலே வயல் இருந்து, மண்ணுக்கு கீழே வைரமும் வைடூரியமும் இருந்தால் கூட, கீழே இருப்பதை விட்டுவிடுங்கள் என கூறினார்.

தேர்தலில் காசு தான் விளையாடி வருகிறது எனவும், குவாட்டரும் , ஸ்கூட்டரும் கொடுத்து ஓட்டு வாங்கி வருகிறார்கள் எனவும் கூறிய கமல்ஹாசன், அதை வாங்க மாட்டோம் என்ற ரவுத்திரம் பழக வேண்டும் என்றார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :