இதய நோய்க்கு தீர்வாகும் முட்டை.. நாளுக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

0
299

முட்டை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்த விடயம் என்றாலும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதனால் என்ன பலன் கிடைக்கும் ? ஒரு நாளைக்கு சாப்பிடலாம் என்பது குறித்து பலருக்கும்.

சந்தேகம் இருக்கின்றது. முட்டையில் அதிகளவில் கால்சியம் இருக்கின்றமையும் இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதை அனைவரும் அறிந்திருந்த போதிலும் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் கொழுப்பு காரணமாக இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்தாக ஒரு கருத்து நிலவுகின்றது.

அமெரிக்க இருதய மருத்துவர்கள் கூட்டமைப்பு 1880 களில் முட்டை சாப்பிடுவதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு அறிவிப்பை விடுக்கவே மக்கள் மத்தியில் முட்டை தொடர்பில் இந்த அச்சம் ஏற்பட்டது.

ஆனால் அவர்கள் பின்னர் ஆராய்ச்சியின் மூலம் முட்டை சாப்பிடுவதனால் அவ்வாறான அபாயம் ஏதும் இல்லை என தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை தெரிவித்துவிட்டது.

முட்டைக்கும் மாரடைப்புக்கும் என்ன சம்பந்தம்?

முட்டையில் அடங்கியுள்ள சத்துக்கள்

இருப்பினும் இதனால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்து இன்னும் நம்மில் பலரும் வெளிவரவில்லை. முட்டையில் 180 மி.கி மாத்திரமே கொழுப்புச்சத்து காணப்படுகின்றது. ஆனால் 6 கிராம் புரதம் நிறைந்துள்ளது. புரதத்தின் பிரதான வளமாகவே முட்டை கருதப்படுகின்றது. 

சாதாரணமாக ஒரு நபர் நாளென்றுக்கு 2 தொடக்கம் 3 முட்டைகள் வரை சாப்பிடலாம். இதயப்பிரச்சினை இருப்பவர்கள் தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு குறையும். முட்டையை மாத்திரம் சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும்.

முட்டையை தினமும் சாப்பிட்டால் பசி குறையும். முட்டையானது உடலில் ஹெச்.டி.எல் எனும் அமிலத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும். முட்டையானது உடல் எடையைக் குறைக்கிறது அதாவது முட்டையில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையும் குறையும்.

முட்டைக்கும் மாரடைப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர் எத்தனை முட்டை சாப்பிடலாம் | Benefits Of Eating Eggs

 முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண்புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ள முழுமையான உணவு என்றால் அது முட்டைதான். எனவே நம் அன்றாட உணவில் அதனை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.