Home India ஈரானில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் கடிதம்

ஈரானில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் கடிதம்

0
ஈரானில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் கடிதம்

ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைதான தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். (Edappadi Palaniswami writes letter Prime Minister Narendra Modi)

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் அரபிக் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஈரானில் உள்ள கிஷ் தீவில் ஒரு மாத காலமாக படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 6 பேரையும் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் கடிதம் எழுதியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Edappadi Palaniswami writes letter Prime Minister Narendra Modi