ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. Earthquake Japan Hokkaido island
இந்நிலையில் ஜப்பானின் ஹொக்கைடோவின் ராவுசு பகுதியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜாகின்தோஸ் தீவில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இயோனியன் கடற்பகுதியில் உள்ள இந்த தீவின் தென்மேற்கில் பூமிக்கடியில் 35.9 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
tags :- Earthquake Japan Hokkaido island
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்
- முகநூல் பயனாளர்களின் தகவல் திருட்டு – முகநூல் நிறுவனத்துக்கு 12 கோடி ரூபாய் அபராதம் !
- கிரீஸில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- தாய்வானில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்
- மெக்சிகோவில் 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் சக்திவாய்ந்த சூறாவளி
- மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!
- கனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு!
எமது ஏனைய தளங்கள்