டொலரின் பெறுமானம் 200 ரூபாவாக அதிகரிக்கும்? கலாநிதி பந்துல அதிர்ச்சி தகவல்!

0
599

சிங்கப்பூர் உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். Dollar Value Increase 200 Rupees Bandula Gunawardana Said Tamil News

நாட்டிலிருந்து வெளியேறும் நிதிப் பெறுமானம் அதிகரிக்கும் போது ரூபாவின் பெறுமதி குறைந்து டொலரின் பெறுமானம் அதிகரிக்கும் என்பது பொதுவான ஒன்றாகும்.

சிங்கப்பூர் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமல் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலே டொலர் ஒன்றின் விலை 170 ரூபாவை அடைந்து விடும்.

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வெளிநாட்டுச் செலாவணியை அதிகரிப்பதே டொலரின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமான ஒரே வழி எனவும் அவர் மேலும் கூறினார்.

இன்று (18) காலை தனியார் வானொலிச் சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites