புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

0
250

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள லோகேஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் “ஐந்து படங்களின் இயக்கத்திற்கு பின் கதைசொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் நிலப்பரப்பை மறுவரையறை செய்ய எனது தயாரிப்பு முயற்சி – ஜி ஸ்குவாட் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும்.

நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் தயாரிப்பின் முதல் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.