பொலிஸை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் ஸ்கொட்லான்ட் யாட் பொலிஸ் மேற்கொள்ளும் விசேட பயிற்சியில் கலந்துகொள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நலின் பண்டார, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, சிரேஷ்ட உதவி செயலாளர் மாலிகா சூரியபெரும, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன ஆகியோர் பிரித்தானிய செல்லவிருந்தனர். DIG Poojiya Sundara Scotland Visit Sri Lanka Tamil News
இந்த செயலமர்வு இன்று (01) முதல் எதிர்வரும் 07ம் திகதி வரை பிரித்தானியா, ஸ்கொட்லாந்தில் இடம்பெறவிருந்தது.
இந்த குழுவினர் மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய விஜயத்தை பிரதமரின் பணிப்புரைக்கமைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸார் தொடர்பில் தற்பொழுது காணப்படும் கருத்துக்களை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த விஜயத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!
சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!