ஓட்டங்களின்றி ஆட்டமிழந்த தோனி: பஞ்சாப் அணிக்கு இலகு இலக்கு

0
105

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இரு போட்டிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் முதலாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இடம்பெற்று வருகின்றன.

தரம்சாலாவில் இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது.

இந்தப் போட்டியிலும் நாணய சுழற்சியை தவறவிட்டது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி. நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் அணியுடனான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.

அதன்படி இன்றைய போட்டியின் தொடக்க வீரர்களாக அணியின் தலைவர் ருதுராஜ் மற்றும் ரகானே இருவரும் களமிறங்கினர். வெறும் ஒன்பது ஓட்டங்களுடன் ரகானே போட்டியிலிருந்து வெளியேறினார். அடுத்ததாக மிட்செல்லுடன் இணைந்து ருதுராஜ் விளையாடிய நிலையில் ருதுராஜ் 32 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மிக சொற்ப ஓட்டங்களிலேயே சென்னை அணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் தோனி 0 என்ற கணக்கில் ஆட்டமிழந்தமை அணியின் எதிர்ப்பார்ப்பு தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

20 ஓவர்கள் நிறைவில் சென்னை அணி 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதன்படி பஞ்சாப் அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் அணி சார்பில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்சல் படேல் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.