தன்னைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தார். Deniswaran Ministerial Position Period Extended 2 More Weeks
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்று அமைச்சரைப் பதவி நீக்கிய முறைமை தவறு என்றும் அவர் தனது அமைச்சுப் பதவியில் தொடரலாம் என்றும் இடைக்காலக் கட்டளை பிறப்பித்தது.
இந்த இடைக்காலக் கட்டளையை எதிர்த்து முதலமைச்சர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்குக்குத் தேவையான ஆவணங்களின் மூலப் பிரதிகளை அணைக்குமாறு கட்டளையிட்டது நீதிமன்றம்.
எனினும் முதலமைச்சர் தரப்பு இன்னமும் தமது ஆட்சேபனையை முழுத் தாக்கல் செய்யவில்லை.
இதனையடுத்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், வடக்கு மாகாண சபையின் அமைச்சராக அதன் முன்னாள் அமைச்சரான பா.டெனீஸ்வரனை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அந்தப் பதவியில் தொடர்வதற்கான இடைக்காலக் கட்டளையை நேற்றுப் பிறப்பித்தது.
வடக்கு மாகாண ஆளுநர் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்று வழங்கிய இடைக்காலக் கட்டளை தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு