2024 ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்றது. குறித்த தொடர்பிலிருந்து பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைவி பாத்திமா சனா இடைநடுவே நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைவி பாத்திமா சனாவின் தந்தை காலமானதையடுத்து அவர் இன்று டுபாயில் இருந்து கராச்சி நோக்கிப் பயணித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எனவே மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் எதிர்வரும் போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைவி பாத்திமா சனா இடம்பெறமாட்டார் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
