Drancy பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவர் தன்னுடைய தாயை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். daughter mother killed knife France
இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த 30 வயதுடைய மகளும், அவரின் 63 வயதுடைய தாயும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் முடிவில் ஆத்திரமடைந்த மகள் பழங்கள் வெட்டும் கத்தியை எடுத்து தனது தாயை வெட்டியுள்ளாள்.
இதனால் மொத்தமாக 10 வெட்டுக்காயங்கள் தாயின் உடலில் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் குறித்த பெண் தீயணைப்பு படையினரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளாள். விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்ததோடு, சடலத்தையும் மீட்டனர்.
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணைகளை Drancy நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- daughter mother killed knife France
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு!
- பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்