தம்புளையில் நேற்றிரவு கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஒருவர் பலியானமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.(Dambulla accident tension situation)
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தம்புளை ஹபரண பிரதான வீதியில், தம்புளை பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்புளை பல்வெஹேர பகுதியைச் சேர்ந்த, 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை தொடர்ந்து அவ்விடத்தில் கூடிய பிரதேச மக்கள், காரின் சாரதியை தாக்க முயற்சித்த போது அவர் தப்பியோடி தம்புளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த மக்கள் காருக்கு தீவைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனை தடுத்த பொலிஸ் அதிகாரியை பொது மக்கள் துரத்தி துரத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, தற்போது தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதோடு பாதுகாப்புக்காக மேலும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Dambulla accident tension situation,Dambulla accident tension situation,Dambulla accident tension situation,