(Today Horoscope 26.1.2021)
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
இன்று சார்வாரி வருடம், தை மாதம் 13ம் நாள், ஜமாதிஸானி 12ம் நாள்,26.1.2021 செவ்வாய்கிழமை, திரயோதசி திதி காலை 1.15 வரை. திருவாதிரை காலை 3.29 மணிவரை 10.59 மரண 52.15 மேல் சித்தயோகம். வாஸ்துநாள்.
திதி: திரயோதசி
பிரதோஷம்
சந்திராஷ்டமம்: கேட்டை
* நல்ல நேரம் : காலை 7.30 மணி – 8.30 மணி மாலை 4.30 – 5.30 மணி
* ராகு காலம் : காலை 3.00 – 4.30 மணி
* எமகண்டம் : மாலை 9.00 – 10.30 மணி
* குளிகை : காலை 12.00 – 1.30 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
மேஷம்:
பண வரவு திருப்தி தரும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்ச்சி காணும் நாள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
ரிஷபம்:
நண்பர்களால் உதவி கிடைக்கும் நாள். மாமன், மைத்துனர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பர். புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்:
முக்கிய நபர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்துசேரும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தும் நாள்.
கடகம்:
புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை. விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பகை பாராட்டியவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
சிம்மம்:
மனக்குழப்பம் நீங்கும் நாள். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர்.
கன்னி:
மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரவழிச் சச்சரவுகள் அகலும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சி கைகூடும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
துலாம்:
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உறவினர்களின் சந்திப்பு கிட்டும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். விவாகப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்:
வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
தனுசு:
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம். அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிட்டும்.
மகரம்:
மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். லாபம் இரு மடங்காகும் நாள். உடல் ஆரோக்கியமாகும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
செய்யும் செயலில் வெற்றி உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் பழைய பங்குதாரர்கள் மீண்டும் தேடி வருவர்.
மீனம்:
மிகவும் யோகமான நாள். பாராட்டும், புகழும் கூடும். பண வரவு திருப்தி தரும். எதிரிகள் விலகுவர். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் நீங்கும். பிறரிடம் ஒப்படைத்த காரியம் முடிந்து மகிழ்ச்சியை வழங்கும்.
மேலும் பல சோதிட தகவல்கள்…
- உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
- பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்