(Today Horoscope 23. 1.2021)
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
இன்று சார்வாரி வருடம், தை மாதம் 10ம் நாள், ஜமாதிஸானி 9ம் நாள்,
23.1.2021 சனிக்கிழமை, தசமி திதி இரவு 9.11 வரை. கார்த்திகை இரவு 10.00 மணிவரை அமிர்தயோகம்.
கார்த்திகை
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
* நல்ல நேரம் : காலை 7.30 மணி – 8.00 மணி மாலை 4.30 – 5.30 மணி
* ராகு காலம் : காலை 9.00 – 10.30 மணி
* எமகண்டம் : மாலை 1.30 – 3.00 மணி
* குளிகை : காலை 6.00 – 7.30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
மேஷம்:
தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தரம் உயர தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.
ரிஷபம்:
உடல் ஆரோக்கியத்தில் மேன்மை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
மிதுனம்:
தொழில் ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். இறை வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம்.
கடகம்:
வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரிகளைஅனுசரித்துச் செல்வது நல்லது. வீடுமாற்றச் சிந்தனை உருவாகும். தகுந்த ஓய்வு உடல்நலத்தைச் சீராக்கும். நட்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்:
பாக்கிகள் வசூலாகி உங்களை மகிழ்ச்சியடைய செய்யும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி:
உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
துலாம்:
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படலாம். விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்:
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துசேரும்.
தனுசு:
காலை நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மகரம்:
முன்னேற்றம் கூடும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகதோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும். முக்கிய நபர்களின் சதிப்பு கிடைக்கும்.
கும்பம்:
இனியசெய்தி தேடி வரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. கொடுக்கல் – வாங்கல் ஒழுங்காகும்.
மீனம்:
மனஉறுதியுடன் செயல்படும் நாள். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். மனதில் மகிழ்ச்சிப் பொங்கும் நாள்.
மேலும் பல சோதிட தகவல்கள்…
- உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
- பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்