(Today Horoscope 21. 1.2021)
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
இன்று சார்வாரி வருடம், தை மாதம் 8ம் நாள், ஜமாதிஸானி 7ம் நாள்,
21.1.2021 வியாழக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 5.30 வரை. சித்தயோகம்.
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்
* நல்ல நேரம் : காலை 10.30 மணி – 11.30 மணி மாலை 11.30 – 12.00
* ராகு காலம் : மதியம் 1.30 – 3 மணி
* எமகண்டம் : காலை 6.00 – 7.30 மணி
* குளிகை : காலை 9.00 – 10.30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
.
மேஷம்:
காலை நேரத்தில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. அருகில் உள்ளவர்களைஅனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
ரிஷபம்:
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று நல்ல முடிவிற்கு வரும். சுப விரயம் உண்டு. வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்:
நல்ல தகவல் வந்து சேரும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவதில் இருந்த தடை அகலும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மனஉறுதி குறையாமல் இருக்க வேண்டும்.
கடகம்:
நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சிதரும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்:
போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட பகை மாறும். நீடித்த நோயிலிருந்து நலம் பெறுவீர்கள்.
கன்னி:
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளைக் கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.
துலாம்:
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
விருச்சிகம்:
முன்னேற்றம் கூட முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத்தருவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தனுசு:
போன் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
மகரம்:
நெருக்கடிகள் அகல நிதியுதவி கிடைக்கும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. உடல் நலம் சீராக மாற்று நண்பர்கள் நன்றிக்குரியவர்களாக நடந்து கொள்வர்.
கும்பம்:
விரோதிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் வரவேண்டியபாக்கிகள் வசூலாகும். அனுபவமிக்கவர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது
மீனம்:
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்
மேலும் பல சோதிட தகவல்கள்…
- உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
- பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்