நாம் இரணுவத்தைக் காட்டிக்கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் கூறிவருகின்றார்கள். ஆனால் உண்மையில் இராணுவத்தில் பிழைகளைச் செய்தவர்களையே காட்டிக்கொடுக்குமாறு நாம் கூறுகின்றோம். அதற்காக முழு இராணுவத்தையும் காட்டிக்கொடுப்பது என்று அர்த்தமல்ல. ஆகவே இதில் உண்மை என்பது எது பொய் என்பது எது என்ற அடிப்படைகளை அறியாமல் எம்மீது இருக்கின்ற காழ்புணர்ச்சிகளின் நிமித்தம் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லிணக்கத்திற்கு ஏற்றதல்ல முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(cv wigneswaran srilankan army)
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவைப் பத்திரமானது மிகச் சரியானது.
அப்பத்திரத்தை ஜனாதிபதி நிராகரிப்பது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட அதற்கு எதிரான செயற்பாடு ஆகும்.
புலிகள் இறந்து விட்டார்கள் என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அவ் அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தவர்களுக்கு வாழ்வாதாரங்களைக் கொடுக்காமல் விடுவது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட எதிரான ஒரு செயற்பாடாகும்.
அமைச்சர் சுவாமிநாதன் கொண்டுவந்த அமைச்சரவைப் பத்திரமானது மிகச் சரியானதாகும். அதற்கேற்றவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்காமையானது மிகவும் பிழையான ஒரு நடவடிக்கையாகும்.
tags :- cv wigneswaran srilankan army
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!