மகிந்தவின் மைத்துனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

0
36

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிஷாந்த விக்ரமசிங்க, நேற்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.