(commercial High Court ordered Mahinda Rajapaksa 14 crore SLTB)
இலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 கோடி ரூபாவை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த தொகையை அவர் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 கோடி ரூபாவை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக போக்குவரத்துச் சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது.
குறித்த கட்டணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இதுவரை செலுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(commercial High Court ordered Mahinda Rajapaksa 14 crore SLTB)
More Tamil News
- நவாலி படுகொலை; உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
- மீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை
- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு
- இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி
- மீனவர்களுக்கு நற்செய்தி; அமைச்சரவையில் முடிவு
- செயலாளர் பதவியை இராஜினமா செய்யவுள்ளார் மஹிந்த அமரவீர