நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்

0
28

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் கவுண்டமணி. 80, 90 களில் கவுண்டமணி – செந்தில் நகைசுவை கூட்டணி இன்றளவும் பேசப்படுகின்றது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.